மின்னணு வாக்காளர்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்

0 2853

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற தமிழகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி புதியதாக சேர்க்கப்பட்ட  வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை  https://www.nvsp.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்போன் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments