மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

0 2442
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில், கீழ்வேளூர், திருப்பரங்குன்றம், கோவில்பட்டி, கந்தர்வக்கோட்டை, அரூர், திண்டுக்கல் தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அறிவித்து, அறிமுகம் செய்து வைத்தார்.

கீழ்வேளூரில் நாகை மாலியும், திருப்பரங்குன்றத்தில் எஸ்.கே.பொன்னுத்தாயும், கோவில்பட்டியில் சீனிவாசனும், கந்தர்வக்கோட்டையில் சின்னதுரையும், அரூரில் குமாரும், திண்டுக்கல்லில் பாண்டியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments