கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவர் -விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

0 926
விமானப் பயணிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவார்கள் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமானப் பயணிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவார்கள் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், பயணங்களின் போது சில விமானப் பயணிகள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பொருட்படுத்தாமலும் இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமுறை அறிவுறுத்திய பிறகும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட பிறகு அலட்சியமாக இருக்கும் பயணிகள், அத்துமீறுபவர்களாக கருதப்பட்டு, அதன்பின்னர் விமான பயணத்திற்கு தகுதி அற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments