இறந்தது போல் நடித்து சிறுத்தை, கழுதைப்புலிக்கு அல்வா கொடுத்து தப்பிக்கும் மானின் வைரல் வீடியோ

0 6211

ன்னை தாக்க வந்த சிறுத்தை, கழுதைப் புலியிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இறந்தது போல் நடித்த மானின் சமயோசித செயல் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவில், மான் வழக்கம்போல் சுற்றித்திரிகிறது. அப்போது, இரைத்தேடி கழுதைப்புலியும் சிறுத்தையும் அங்கு வருவதை அறிந்து சுதாரித்துக் கொண்ட மான், உடனடியாக இறந்தது போல் நடிக்கத் தொடங்கியது. கழுதைப்புலி வந்து சீண்டியபோதும், இம்மியளவும் அசையாமல் கட்டை போல் மான் கிடந்தது.

கழுதைப்புலியும், சிறுத்தையும் அங்கிருந்து நகர்ந்த பின்னர், மான் எழுந்து தப்பி ஓடியது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments