அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்... முதலமைச்சர் நம்பிக்கை 

0 2848

ருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னேரே, மக்களின் கோரிக்கையை, ஆளும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார்.

சேலத்தில் 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், அதிமுக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கூட்டத்திற்கு வந்த முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் பட்டியல் தொடர்பான அதிப்ருதி அனைத்து கட்சிகளிலும் பொதுவாக இருப்பது தான் என்றும், அவை பேசி சரிசெய்யப்படும் என்றார்.. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத்தெரிவித்த முதலமைச்சர், பக்குவமில்லாத அரசியலை தேமுதிகவினர் கையாள்வதாகவும், கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் விமர்சனம் செய்வது சரியல்ல, அழகல்ல எனவும் தெரிவித்தார்.

தேர்தலுக்காக வாக்குறுதி அளிக்கும் கட்சி அதிமுக அல்ல என்ற முதலமைச்சர், மக்கள் தேவைகளை அறிந்து தேர்தலுக்கு முன்னதாகவே, பயிர்க்கடன், நகைக்கடன்களை தள்ளுபடி செய்ததாக சுட்டிக்காட்டினார். திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அறிக்கையை முழுமையாக படித்த பின்னரே கருத்துக் கூறமுடியும் என முதலமைச்சர் கூறினார்.

தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகும் கருத்து கணிப்புகள் பொய்யானவை என்ற முதலமைச்சர், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியுறும் என கருத்து கணிப்புகள் வெளியானதாகவும், ஆனால், இரு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

முன்னதாக கட்சி நிர்வாகிகளின் ஆலோசனையில் பேசிய முதலமைச்சர், தேர்தல் பணியில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது என வலியுறுத்தியதோடு, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் தேனீக்கள் போல், அயராது பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments