பாலியல் தொல்லை வழக்கில், சிபிசிஐடி விசாரணைக்கு சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆஜர்

0 1589
பாலியல் தொல்லை வழக்கில், சிபிசிஐடி விசாரணைக்கு சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆஜர்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி, சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்தார். இது குறித்து சிபிசிஐடி வழக்குப் பதிந்துள்ளது.

சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி மீது இது வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றம் வினவியது.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றஞ்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அதன்படி, எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான அதிகாரியிடம், சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் மற்றும் விசாரணை அதிகாரியான எஸ்.பி முத்தரசி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments