விருதுநகர் அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது வேன் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு ,5 பேர் காயம்

விருதுநகர் அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது வேன் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு ,5 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது வேன் மோதியதில் அக்கா-தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சின்னதம்பியாபுரத்தைச் சேர்ந்த பாண்டி, மற்றும் செல்வி ஆகியோர் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக
பெத்துரெட்டிபட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த வேன் ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
அதில் பாண்டி,செல்வி ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த 5 பேருக்கு காயமடைந்தனர்.
Comments