குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நெட்பிளிக்ஸிற்கு நோட்டீஸ்
நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ”பாம்பே பேகம்ஸ்” என்ற தொடரில் குழந்தைகள் ஆபாசமாக சித்தரிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அதை நிறுத்த கூறி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூடுதல் அவகாசம் கேட்டு கோரியுள்ளது.
இது குறித்து அந்த ஆணையத்தின் தலைவர் பிரியாங்க் கனூங்கோ கூறுகையில், நெட்பிளிக்ஸ் தரப்பில் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், அந்த தொடரை ஆய்வு செய்து நீக்குவது தொடர்பாக முடிவெடிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டதாகவும் கூறிய அவர், செவ்வாய்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அந்த தொடரை தயாரித்த குழுவினர் ஆணைய அதிகாரிகளை சந்திக்க நெட்பிளிக்ஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில், செவ்வாயன்று காலை 11.30 மணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments