கிரீஸ் நாட்டில் சொகுசு கப்பலில் தீ விபத்து; குபுகுபுவென கரும்புகை வெளியேறியதால் பதட்டம்

0 1173
கிரீஸ் நாட்டில் சொகுசு கப்பலில் தீ விபத்து; குபுகுபுவென கரும்புகை வெளியேறியதால் பதட்டம்

கிரீஸ் நாட்டில் Corfu தீவுப் பகுதியில் இருந்த சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அந்த கப்பலில் தீப்பிடித்த இடத்தில் இருந்து அடர்த்தியான கரும்புகை குபு குபுவென வெளியேறிய படி இருந்தது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த தும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கப்பலில் தீப்பிடித்ததற்கான விவரம் எதுவும் தெரிய வரவில்லை. மேலும் இந்த தீ விபத்தில் உயிரிழப்பு மற்றும் சேத விவரம் குறித்து எதுவும் தெரிய வில்லை. கடலில் நின்ற பிரமாண்ட கப்பல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments