சேலத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.37.57 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்கம் பறிமுதல்..!
சேலத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.37.57 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்கம் பறிமுதல்..!
சேலத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 37 கோடி ரூபாய் மதிப்பிலான 237 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
தலைவாசல் அடுத்த பெரியேறி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மறித்து ஆய்வு செய்ததில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 37 கோடியே 57 லட்சம் மதிப்பிலான 237 கிலோ தங்க நகைகள் சிக்கின.
கொண்டு செல்லப்பட்ட நகைகளை அழகாபுரம் பொது மையத்தில் வைத்து தனியார் தங்க நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய எடுத்து வரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Comments