மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய 4 ஊழியர்கள் மீது மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம்

0 812
மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய 4 ஊழியர்கள் மீது மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம்

அரியானா மாநிலம் குருகிராமில் நேற்று மழை பெய்தபோது ஒரு மரத்தடியில் நின்றவர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர்.

டெல்லி, அரியானா மாநிலங்களில் நேற்றுக் காலை முதல் மழை பெய்தது.

அரியானாவின் குருகிராமில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் தோட்டப் பணியாளர்கள் 4 பேர் மழையில் நனையாமல் இருக்க ஒரு மரத்தடியில் ஒதுங்கினர்.

அப்போது மரத்தின்மீதும் அவர்கள் மீதும் மின்னல் தாக்கியதில் நால்வரும் காயமடைந்து மயங்கி விழுந்தனர். இந்தக் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

கடுமையான தீக்காயமடைந்த ஒருவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்ற இருவர் அபாயக்கட்டத்தைத் தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments