இந்தியா-சீனா இடையே விரைவில் 11 வது சுற்றுப் பேச்சுவார்த்தை..! நேற்றைய எல்லைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஒப்புதல்

0 690
இந்தியா-சீனா இடையே விரைவில் 11 வது சுற்றுப் பேச்சுவார்த்தை..! நேற்றைய எல்லைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஒப்புதல்

டாக் எல்லையில் அமைதியை மேலும் நிலை நிறுத்த இந்தியா சீனா அதிகாரிகள் இடையே நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அசல் எல்லைக்கோடு அருகே இருந்த படைகளை சீனா விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டதையடுத்து தற்போதைய நிலவரத்தை எல்லை பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் இருநாட்டு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

படைக்குறைப்பு நடவடிக்கையை நிறைவு செய்யவும் அமைதிக்கான திட்டங்களை செயல்படுத்தவும் விரைவில் 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தவும் இருதரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments