அ.ம.மு.க தேர்தல் அறிக்கையில் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம்..! எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி

0 3337
அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்

ம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் இதனை அவர் வெளியிட்டார்.

அதில் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும், தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை உருவாக்கப்படும் உள்ளிட்ட 63 பக்க தேர்தல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 130 வேட்பாளர்கள் அடங்கிய 3ஆவது பட்டியலை டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானும், அய்யாத்துரை பாண்டியன் கடையநல்லூரிலும், மயிலாடுதுறையில் எழுத்தாளர் கோமல் அன்பரசன் உள்ளிட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments