ஊழியர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி; முன்னணி நிறுவனங்கள் வரிசையில் ஏர்டெல் முடிவு..!

ஊழியர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி; முன்னணி நிறுவனங்கள் வரிசையில் ஏர்டெல் முடிவு..!
ஏர்டெல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலவை ஏற்க முன்வந்துள்ளது.
அரசின் விதிமுறைகளை பின்பற்றி தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட முன்வந்துள்ள ஏர்டெல் நிறுவனம், அது தொடர்பாக மருத்துவமனை ஒன்றுடன் கூட்டு சேரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ரிலையன்ஸ், இன்போசிஸ், டி.சி.எஸ், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் கொரோனா தடுப்பூசி செலவை ஏற்பதாக அறிவித்துள்ளன.
Comments