காதை கடித்து குதறிய 2 கால் ஒண்டிப்புலி..! கால்வாசி காது மிஸ்ஸிங்

0 6148
காதை கடித்து குதறிய 2 கால் ஒண்டிப்புலி..! கால்வாசி காது மிஸ்ஸிங்

கன்னியாகுமரி அருகே முன்பகை காரணமாக நடந்த சண்டையில் தொழிலாளியை பிடித்து காதை கடித்து குதறிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கால் பகுதி காது காணாமல் போன பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சினிமா ஒன்றில் கொடுக்கல் வாங்கல் தகராறில் காமெடி நடிகர் செந்தில் காதை கடித்து எடுத்து வரும் காட்சி மிகவும் பிரபலம். அதே போல கன்னியாகுமரி மாவட்டம் பரப்பற்று எள்ளுவிளை கிராமத்தில் தொழிலாளியின் காதை கடித்து குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடிப்பட்ட காது தெரியாத அளவுக்கு முண்டாசு கட்டி அமர்ந்திருக்கும் இவர்தான் சுமை தூக்கும் தொழிலாளி ராஜன்.

இவரது வீட்டில் மாமரம் ஒன்று உள்ளது. அந்த மரம் பக்கத்து வீட்டை சேர்ந்த மோகன் என்பவர் வீட்டின் மீது படர்ந்து கிடந்ததாள் மரத்தின் காய்ந்த இலைகள் அதிகமாக உதிர்ந்துள்ளது. இந்த மரக்கிளையை வெட்டி தருமாறு ராஜனிடம் கேட்க இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை விசாரித்த போலீசார் மரக்கிளையை வெட்ட 2 மாதம் அவகாசம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மண்டைக்காடு கோவிலுக்கு செல்ல தனியாக புறப்பட்டுச்சென்ற ராஜனை மறித்த மோகன், தனது நண்பர்களுடன் தாக்கியுள்ளார். அபோது எதிர்த்து அடித்த ராஜன் மீது பாய்ந்த மோகன் , ராஜனின் இடது பக்க காதை ஒண்டிப்புலி போல கவ்விப்பிடித்து குதறி வைத்தார்

இதில் பாதி அளவு காது காணாமல் போனது. மோகன் கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் இதையடுத்து காதில் பலத்த காயமடைந்த ராஜன் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கால் பகுதி காது சிதறிய நிலையில் அதனை தையல் மூலம் ஒருங்கிணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதையடுத்து சிகிச்சைக்கு பின் ராஜன் வீடு திரும்பியுள்ள ராஜன், சம்பவத்தன்று தன் மீது தாக்குதல் நடத்திய மோகன் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியையும் பறித்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்

ராஜனின் காதை கடித்து குதறிவிட்டு தப்பிய இளைஞர் மோகன் அவரது நண்பர்கள் ஜெகன் மற்றும் பிரடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

அதே நேரத்தில் காதில் கால் பங்கை பறிகொடுத்தவர் கூட தையல்களுடன் வீடுதிரும்பிவிட்ட நிலையில் கடித்தவரை போலீசார் இன்னும் தேடி வருவதாக கூறுவது தான் வேடிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments