5 ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து கட்சித்தாவிய 170 எம்எல்ஏக்கள்

0 2298
நாடெங்கிலும் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 170 சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்கு மாறி உள்ளது ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாடெங்கிலும் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 170 சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்கு மாறி உள்ளது ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் சுய உறுதிமொழி பத்திரங்களை வைத்து ஆய்வு மேற்கொண்ட அந்நிறுவனம், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும், இதே ஐந்து ஆண்டுகளில் பாஜகவில் இருந்து 18 எம்எல்ஏக்கள் கட்சித்தாவியதும் தெரியவந்துள்ளது.

மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவில் இருந்து 5 எம்பிக்கள் கட்சித்தாவிய நிலையில், 2016 முதல் 2020ஆம் வரையிலான 5 ஆண்டுகளில் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு மாறியதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments