திமுக கூட்டணியில் கொ.ம.தே.கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

0 5102
திமுக கூட்டணியில் கொ.ம.தே.கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியினர், திருச்செங்கோடு தொகுதியில் ஈஸ்வரனும், பெருந்துறையில் கே.கே.சி பாலுவும், சூலூர் தொகுதியில் பிரிமியர் செல்வம் என்கிற காளிச்சாமியும் போட்டியிடுவார்கள் அறிவித்தனர்.

பின்னர் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவின்படி 3 இடங்களை பெற்று உள்ளதாகவும்
அதிக வாக்குகள் பெறவே உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைப்போம் எனவும், கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக சட்டமன்றத்தில் முழுமையாக குரல் கொடுப்போம் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments