சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி?

0 4135
சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அமமுக கூட்டணியில் 208 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருப்பதால் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

வரும் ஞாயிறன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தனித்துப் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments