விவசாய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது - முதலமைச்சர்

0 1161
மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் ஏற்காடு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் ஏற்காடு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவு கேட்டு வாழப்பாடியில் முதலமைச்சர் 2வது கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், இந்தத் தேர்தல் தர்மத்திற்கும்,அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் என்றார். தேர்தலில் என்னென்ன வாக்குறுதி கொடுத்தோமோ அதனை நிறைவேற்றி இருப்பதாக கூறினார்.

விவசாய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்திருப்பதற்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து தம்பம்பட்டியில் முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு ஆதரவாக ராணிப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments