திமுக எம்எல்ஏக்களில் 15 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை

0 8665
திமுக எம்எல்ஏக்கள் 97 பேரில் 82 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், 15 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திமுக எம்எல்ஏக்கள் 97 பேரில் 82 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், 15 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவுக்கு மாறியதால் அந்த தொகுதியில் டாக்டர்.நா.எழிலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ரங்கநாதன், எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகருக்கு போட்டியிடும் வாய்ப்பு கிட்டவில்லை.

மதுராந்தகம் தொகுதி மதிமுக வசம் சென்றதால் எம்எல்ஏ புகழேந்திக்கு போட்டியிடும் வாய்ப்பு இல்லை.

செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், ஆர்த்தி அரசுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கீழவேளுர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் மதிவாணனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

குளித்தலை தொகுதி எம்எல்ஏ ராமர், கூடலூர் தொகுதி எம்எல்ஏ திராவிடமணி, ஓசூர் எம்எல்ஏ சத்யா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் தற்போதைய எம்எல்ஏ இதயவர்மன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அந்த தொகுதி எம்எல்ஏ சரவணன், பாளையங்கோட்டை எம்எல்ஏ மைதீன்கான் ஆகியோருக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

திமுக எம்எல்ஏக்களில் 2 பேர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதி எம்எல்ஏ ஒய் பிரகாஷ் ஓசூர் தொகுதியில் களமிறங்குகிறார். அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments