போக்குவரத்து ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகள் அறிவிப்பு: போக்குவரத்து துறை சுற்றறிக்கை

0 2151
போக்குவரத்து ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகள் அறிவிப்பு: போக்குவரத்து துறை சுற்றறிக்கை

போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கும் வாக்கு சேகரிக்க கூடாது என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசியல் கட்சிகளுடன் வாக்கு சேகரிக்க செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் அரசியல் கட்சி சார்பாக வாக்குச்சாவடி முகவராக பணி செய்யக்கூடாது என்றும், தேர்தல் பணிகளில் ஈடுபடும்போதும், வாக்கு எண்ணிக்கையின்போதும் அரசியல் கட்சியினருக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவிக்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், குறிப்பிட்ட கட்சிக்காக அல்லாமல் தன்னுடைய பணியை சுதந்திரமாகவும், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், தவறான நடத்தைகள் செய்வதாக தெரியவந்தால் அவர்கள் மீது தேர்தல் விதி எண்.134படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments