"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடக்கு கேரளம் முதல் வடக்கு மகாராஷ்ட்ரா வரையிலான வளிமண்டலத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
13, 14 ஆம் தேதிகளில் மேற்கு மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும், 15, 16 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு முற்பகல் வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதன் பின்னர் தெளிவாகவும் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments