சட்டப்பேரவைத் தேர்தலில் வெவ்வேறு கட்சிகள் சார்பாக களமிறங்கும் சகோதரர்கள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் உடன்பிறந்த அண்ணன் - தம்பி இருவரும் இருவேறு கட்சிகள் சார்பில் எதிர் எதிராக சட்டமன்றத் தேர்தலில் மோதுகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் உடன்பிறந்த அண்ணன் - தம்பி இருவரும் இருவேறு கட்சிகள் சார்பில் எதிர் எதிராக சட்டமன்றத் தேர்தலில் மோதுகின்றனர்.
ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் திமுக சார்பில் மகாராஜன் என்பவரும், அதிமுக சார்பில் அவரது தம்பி லோகிராஜன் என்பவரும் எதிரெதிராக களமிறங்கினர். அதில் திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணன் மகாராஜன் வெற்றி பெற்றார்.
தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணன் மகாராஜன் திமுக சார்பிலும், தம்பி லோகிராஜன் அதிமுக சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
Comments