அடேங்கப்பா ஒரு கோடிப்பே.... கட்டிட மேஸ்திரிக்கு தோண்ட தோண்ட கிடைத்த முகலாய தங்க நாணயங்கள்!

0 149465
மகாராஷ்டிராவின் சிக்லி பகுதியில் ஒன்றே கால் கோடி மதிப்புள்ள தங்க புதையல் கிடைத்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவின் சிக்லி பகுதியில் ஒன்றே கால் கோடி மதிப்புள்ள தங்க புதையல் கிடைத்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த திங்கள் கிழமையன்று, Pimpri-Chinchwad Police’s Crime Branch காவல்துறையினருக்கு பிம்ப்ரி- விதல்நகர் பகுதியில் வசிக்கும் சதாம் சலார் கான் பதான் என்பவர் சட்டவிரோதமாக வரலாற்று தங்க நாணயங்களை தன்னிடம் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்த்து காவல்துறையினர் பதானின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில், 216 தங்க நாணயங்களை பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட நாணயங்கள் கி.பி 1720 முதல் 1750 வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நாணயத்தின் மதிப்பு அறுபதாயிரம் ரூபாய் முதல் எழுபதாயிரம் ரூபாய் வரை இருக்கும் என்றும், கிடைக்கப்பெற்ற மொத்த நாணயங்களின் மதிப்பு சுமார் 1.3 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து பதான் , தான் ஒரு வீடு கட்டும் மேஸ்திரி என்றும், சிக்லி பகுதியில் கட்டுமாணப்பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, இந்த தங்க புதையல் கிடைத்ததாகவும் தெரிவித்தார். முகலாய ஆட்சிகாலத்தை சார்ந்த இந்த பழமையான நாணயங்கள் தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments