திமுகவின் முன்னாள் அமைச்சர்களை எதிர்த்து களமாடும் அதிமுக வேட்பாளர்கள்?

0 3230
திமுகவின் முன்னாள் அமைச்சர்களை எதிர்த்து களமாடும் அதிமுக வேட்பாளர்கள்?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். இதேபோல் அக்கட்சியின், முன்னாள் அமைச்சர்கள் எந்தெந்த தொகுதியில், யார், யாரை எதிர்த்து களம் காண்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.... 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவின் ஆதிராஜாராம் அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காட்பாடி தொகுதியில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை எதிர்த்து, அதிமுக சார்பில் குடியாத்தம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராமு போட்டியிடுகிறார்.

திருச்சி மேற்கு தொகுதியில், திமுகவின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு களம்காண்கிறார். இவரை எதிர்த்து, அதிமுகவின் பத்மநாபன் போட்டியிடுகிறார்.

ஆலந்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனை திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி போட்டியிடுகிறார்.

திருவண்ணாமலை தொகுதியில், திமுக சார்பில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடும் நிலையில், அங்கு பாஜக வேட்பாளர் களம்காண்கிறார்.

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் பொன்முடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார்.

மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து, பாஜக வேட்பாளர் களம்காண்கிறார்.

காங்கேயம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை எதிர்த்து, அதிமுக சார்பில் ஏ.எஸ்.இராமலிங்கம் போட்டியிடுகிறார்.

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து, பாமகவின் பொருளாளர் திலகபாமாக களம்காண்கிறார்.

திருவள்ளூர் தொகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் B.V.ரமணாவை எதிர்த்து, அத்தொகுதியின் நடப்பு எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் களம்காண்கிறார்.

குறிஞ்சிபாடி தொகுதியில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, அதிமுகவின் இராம.பழனிசாமி போட்டியிடுகிறார்.

அருப்புக்கோட்டை தொகுதியில், முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரனை எதிர்த்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் களம்காண்கிறார்.

ஆலங்குளம் தொகுதியில் திமுகவின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவை எதிர்த்து, அதிமுக சார்பில் மனோஜ்பாண்டியன் போட்டியிடுகிறார்.

தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்து, தாமாக சார்பில் விஜயசீலன் போட்டியிடுகிறார்.

திருப்பத்தூர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பணை எதிர்த்து, அதிமுகவின் மருது அழகுராஜ் களம்காண்கிறார்.

திருச்சுழி தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து, மூவேந்தர் முன்னணி கழகத்தின் எஸ்.ஆர்.தேவர் என்கிற இராஜசேகரன், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை எதிர்த்து, பாஜக வேட்பாளர் களம்காண்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments