விருகம்பாக்கம் வேட்பாளர் பிரபாகர் ராஜாவை மாற்ற வலியுறுத்தி அண்ணா அறிவாலயத்தில் விருகம்பாக்கம் திமுக தொண்டர்கள் தர்ணா

0 1756
விருகம்பாக்கம் வேட்பாளர் பிரபாகர் ராஜாவை மாற்ற வலியுறுத்தி அண்ணா அறிவாலயத்தில் விருகம்பாக்கம் திமுக தொண்டர்கள் தர்ணா

விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர்கள், அண்ணா அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனசேகரன் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் சுமார் 80 சதவீதம் பேர் தங்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments