173 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலில் 12 பேர் பெண்கள்..!

0 2890
173 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலில் 12 பேர் பெண்கள்..!

திமுக வேட்பாளர் பட்டியலில் பெண் வேட்பாளர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன், குடியாத்தம் தொகுதியில் வி.அமலு, திண்டிவனம் தொகுதியில் சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கெங்கவல்லி தொகுதியில் ரேகா பிரியதர்ஷினியும், ஆத்தூர் தொகுதியில் ஜீவா ஸ்டாலின் என்பவரும், தாராபுரம் தொகுதியில் கயல்விழி செல்வராஜ் என்பவரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் க.சிவகாமசுந்தரி, மானாமதுரையில் ஆ.தமிழரசி, மதுரை மேற்கு தொகுதியில் சி.சின்னமாள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா, மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments