ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
பாலியல் அத்துமீறல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை சஸ்பென்ட் செய்யாதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

பாலியல் அத்துமீறல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை சஸ்பென்ட் செய்யாதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாமல், புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியை தடுத்தார் என எஸ்.பி.-யை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பெண் எஸ்.பி.-க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணிக்கும் என தெரிவித்த நீதிபதி, விசாரணை அறிக்கையை வருகிற 16 ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரைத்திருந்த நிலையில், அவரே விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்திருந்தார்.
Comments