சட்டமன்றத் தேர்தல் ; பிரச்சாரக் களத்தில் அதிமுகவினர்

0 1302
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் உற்சாகமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் உற்சாகமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பவுன்ராஜ் மீண்டும் போட்டியிடுகிறார்.

செம்பனார்கோவிலில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்த பவுன்ராஜ், செங்கழுநீர் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள பரஞ்சோதி, ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிச்சாண்டார்கோயில், கூத்தூர், சமயபுரம், மண்ணச்சநல்லூர், கல்பாளையம், இருங்களூர், புரத்தாக்குடி உள்ளிட்ட பகுதியில் அவர் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தங்களது குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பூஜைகள் செய்து வழிபட்ட பின்னர் பிரச்சாரத்தை தொடங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments