புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வலியுறுத்தி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

0 1078
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் வெறும் 15 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பதால் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் கூடியது. அதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து களம் காண வேண்டும் என தலைமைக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments