புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா?

0 1918
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீட்டில் பா.ஜ.க. - அதிமுக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக தனித்து போட்டியிட நிர்வாகிகள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 இடங்களை பிரித்துக் கொள்வதில் பா.ஜ.க. - அதிமுக இடையே இழுபறி நீடிக்கிறது.

அதிமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க கோருவதால், பல கட்டப் பேச்சுவார்த்தைக்கு பின்னரும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இன்று மாலைக்குள் இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்பட்ட நிலையில், அதிமுக தனித்து போட்டியிட நிர்வாகிகள் சிலர் தலைமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments