அமிர்தரசில் மீண்டும் தொடங்கியது பயணிகள் ரயில் போக்குவரத்து

0 1903
அமிர்தரசில் மீண்டும் தொடங்கியது பயணிகள் ரயில் போக்குவரத்து

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டதையடுத்து 169 நாட்களுக்குப் பின் மீண்டும் பயணிகள் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது.

மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இருந்து பஞ்சாபில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அமிர்தசரசில் பயணியர் ரயில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. கோதுமை அறுவடைக்காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் போராட்டத்தை நேற்று முடித்துக் கொண்டனர். இந்நிலையில் 169 நாட்களுக்குப் பின் அமிர்தசரசில் மீண்டும் பயணியர் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments