ராஜஸ்தானில் சிவராத்திரி பிரசாதம் உண்ட 70-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம்

ராஜஸ்தானில் சிவராத்திரி பிரசாதம் உண்ட 70-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம்
ராஜஸ்தானில் சிவராத்திரி பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உள்ளது.
துங்கர்பூர் (Dungarpur) நகரில் உள்ள ஒரு கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் பிரசாதத்தை உண்ட சிறிது நேரத்திலே பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் என உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து 3 மருத்துவ குழுவினர் பக்தர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், உணவில் ஏதேனும் கலக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Comments