காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மம்தா பானர்ஜி: சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரம் செய்ய திட்டம்

கால் எலும்பு முறிவு ஏற்பட்ட மம்தா பானர்ஜி: சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரம் செய்ய திட்டம்
காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் நந்திகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களில் பிரச்சாரத்தைத் தொடர இருப்பதாக தெரிவித்துள்ள மமதா பானர்ஜி தம்மை யாரோ தள்ளிவிட்டதால் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இதனிடையே மருத்துவமனை வட்டாரம் வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில் மமதா பானர்ஜி உடல் நலம் தேறி வருவதாகவும் உடலில் சோடியம் அளவு குறைவாக இருப்பதாகவும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments