எங்கள்மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியது முற்றிலும் தவறானது: தேர்தல் ஆணையம்

0 1581
எங்கள்மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியது முற்றிலும் தவறானது: தேர்தல் ஆணையம்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தங்கள்மீது குற்றம் சாட்டியது முற்றிலும் தவறானது என்று தேர்தல் ஆணையம் பதிலடி அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் தமக்குரிய பாதுகாப்பைத் தரத் தவறிவிட்டதால்தான் நந்திகிராம் தொகுதியில் தாம் தாக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

காவல்துறை இயக்குநர் மாற்றப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தமது பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாகவும் சாடியிருந்தார். தமது உயிரைப் பறிக்க சதி நடந்ததாகவும் மம்தா குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் ஒரு மாநிலத்தில் தேர்தலை நடத்துவதால் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு முழுவதையும் தேர்தல் ஆணையம் கைப்பற்றி விட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments