அகமதாபாத்தில் இன்று நடக்கிறது முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி

0 4546
அகமதாபாத்தில் இன்று நடக்கிறது முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள்  உலகின் மிகப் பெரிய மைதானமான அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணி இந்த 5 போட்டிகளில் 4ல் வென்றால் நம்பர் ஒன் இடத்தை கைப்பற்ற முடியும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இன்றைய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments