அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் வாழப்பாடிக்கு செல்கிறார். ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி அளவில் அவர் அதிமுக வேட்பாளர் சித்ராவுக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
தொடர்ந்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு கெங்கவல்லி அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்தும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை பகுதியில் மாலை 8 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
Comments