மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இலங்கை மற்றும் குமரிக்கடல் பரப்பில் வளிமண்டலத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி,தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
Comments