கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள்.! உடன்பாடு கண்டு திமுக அறிவிப்பு.!

0 4471
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள்.! உடன்பாடு கண்டு திமுக அறிவிப்பு.!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்து அதற்குரிய ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

 இதன்படி, சென்னை வேளச்சேரி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகை, கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்கோவில், அரக்கோணம், செய்யூர், வானூர், நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில், களம் காண்கிறது. இதில் 4 தனித் தொகுதிகளாகும்.

மார்க்சிஸ்ட் கட்சியுடன் நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, பவானிசாகர், வால்பாறை, திருப்பூர் வடக்கு, சிவகங்கை, திருத்துறைப்பூண்டி, தளி ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, சூலூர், பெருந்துறை, திருச்செங்கோடு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

மனித நேய மக்கள் கட்சிக்கு மணப்பாறை, பாபநாசம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு தொகுதியில் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்.தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments