தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

0 1478
வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், அடுத்த மாதம் 6ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்.

வேட்பாளர் மற்றும் அவருடன் வருவோர், மனுத்தாக்கல் மையத்திற்கு 200 மீட்டருக்கு முன் வாகனங்களை நிறுத்த வேண்டும், 100 மீட்டருக்கு முன் வரை மட்டுமே அரசியல் கட்சியினருக்கு அனுமதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் அல்லது அவர் சார்பாக முன்மொழிபவர்கள் என மொத்தம் மூன்று பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதும். அங்கீகரிக்கப்படாத கட்சி, பதிவு செய்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வருகிற 19-ந் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். 20-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 22-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments