15 தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் நேரடி போட்டி..!

0 4831
15 தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் நேரடி போட்டி..!

மிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளில், 15 இடங்களில் அதிமுகவை எதிர்த்து களமிறங்குகிறது.

பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், ஊத்தங்கரை, ஓமலூர், மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, அறந்தாங்கி, நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, வேளச்சேரி ஆகிய 15 தொகுதிகளில் அதிமுகவுடன் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதுகிறது.

அதே போன்று உதகை, கோவை தெற்கு, காரைக்குடி, குளச்சல், விளவங்கோடு ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரசும், பாஜகவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சோளிங்கர், விருதாச்சலம், மயிலாடுதுறை ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் பாமகவும் களமிறங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் கிள்ளியூர், ஈரோடு கிழக்கு ஆகிய 2 தொகுதிகள், அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments