புதுச்சேரி தேர்தல் : திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு

0 2429
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஏ.வி.எஸ் என்றழைக்கப்படும் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments