கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள்.! உடன்பாடு கண்டு திமுக அறிவிப்பு.!

0 4893
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள்.! உடன்பாடு கண்டு திமுக அறிவிப்பு.!

திமுக கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில், அதிக தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கான 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, அதற்குரிய ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இதன்படி, சென்னை வேளச்சேரி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகை, கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காட்டுமன்னார்கோவில், அரக்கோணம், செய்யூர், வானூர், நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் காண்கிறது. இதில் 4 தனித் தொகுதிகள் ஆகும். இரண்டு பொதுத்தொகுதிகள் ஆகும்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, பவானிசாகர், வால்பாறை, திருப்பூர் வடக்கு, சிவகங்கை, திருத்துறைப்பூண்டி, தளி ஆகிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு, சூலூர், பெருந்துறை, திருச்செங்கோடு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெறுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு மணப்பாறை, பாபநாசம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் மனித நேய மக்கள் கட்சி களம் காண்கிறது.

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments