மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனத்திற்க்கு அனுமதி

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனத்திற்க்கு அனுமதி
கொரோனாவுக்கு 'மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
'மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 'மூக்கு வழியே தடுப்பு மருந்தை செலுத்திப் பரிசோதிக்க அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பேஸ்-1 கிளினிக்கல் டிரையலை தொடங்கியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியை, தவிர்க்கலாம் என்றும், 0.1 மிலி அளவிலான மருந்தை மூக்குக்குள் இட்டுக்கொண்டாலே நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சென்னை,ஐதராபாத்தில் தடுப்பு மருந்தின் பரிசோதனை தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments