தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று

0 58029
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments