மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1665
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இலங்கை மற்றும் குமரிக்கடல் பரப்பில் வளிமண்டலத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 13 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு முற்பகலில் வானம் மேகமூட்டத்துடனும், அதன் பின்னர் தெளிவாகவும் காணப்படும் என்றும், நகரில் அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகேரளம் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments