மம்தாவுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு, உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது- டாக்டர்கள் தகவல்

மம்தாவுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு, உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது- கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை டாக்டர்கள் தகவல்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இடது கணுக்காலில் ஆழமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அவர் சிகிச்சை பெற்று வரும் கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மம்தாவின் வலது தோள், வலது முன்னங்கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். தமக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திறணல் ஆகியன ஏற்பட்டதாக அவர் கூறியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் மம்தா இருப்பதால் இன்று வெளியாக இருந்த கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதனிடையே மருத்துவமனையில் இருந்தவாறு வெளியிட்ட வீடியோ பதிவில், திரிணமூல் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என மம்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments