நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்கு ஸ்கேனியா பேருந்து வழங்கப்பட்டதா?

0 2767
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்கு சுவீடன் நிறுவனமான ஸ்கேனியா, சொகுசு பேருந்தை வழங்கியது என வெளியான ஊடக செய்திகளை அமைச்சரின் அலுவலகம் அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்கு சுவீடன் நிறுவனமான ஸ்கேனியா, சொகுசு பேருந்தை வழங்கியது என வெளியான ஊடக செய்திகளை அமைச்சரின் அலுவலகம் அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ளது.

ஸ்கேனியா பேருந்துகளை இந்தியாவில் விற்க பலருக்கு கமிஷன் கொடுத்ததாக ஸ்கேனியா நிறுவனம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 2016 ல் நடந்த கட்கரியின் மகள் திருமணத்திற்காக அவரது மகன்களுக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்றுக்கு ஸ்கேனியா சொகுசு பேருந்தை வழங்கியது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நாக்பூரில், காற்று மாசை குறைக்கும் நோக்கில், எத்தனாலில் இயங்கும் ஸ்கேனியா பேருந்துகளை வாங்க மட்டுமே நிதின் கட்கரி பரிந்துரைத்தார் என்றும் அந்த பேருந்துகள் அனைத்தும் சோதனை ஒட்டத்திற்குப் பிறகு ஸ்கேனியா நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகவும், நிதின் கட்கரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments