தற்சார்பு இந்தியா திட்டம் நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே நன்மை பயக்கும்-பிரதமர் மோடி

0 1762
இந்தியா சுயசார்பை எட்டுவது உலகிற்கே நன்மையாக முடியும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா சுயசார்பை எட்டுவது உலகிற்கே நன்மையாக முடியும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் மையக்கருத்து என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே வளங்களையும், உருவாக்குவது ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் டிஜிட்டல் வடிவத்தை காணொலியில் அறிமுகம் செய்து வைத்து மோடி பேசினார்.

பகவத் கீதை நம்மை சிந்திக்க தூண்டுகிறது என்றார் மோடி. நம்மை கேள்வி கேட்பவர்களாகவும், திறந்த மனதுடன் விவாதிக்க நம்மை ஊக்குவிக்கவும் கீதையால் முடியும் என மோடி குறிப்பிட்டார்.

அண்மையில் கொரானாவுக்கு உலகே மருந்து தேடிய போது இந்தியா தன்னால் இயன்றதை செய்தது என்ற மோடி, இந்தியாவின் தடுப்பூசி உலகம் முழுதும் சென்றடைந்ததாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments