புதுச்சேரியில் அதிமுக கூடுதல் தொகுதிகளை கேட்பதால், பா.ஜ.க. - அதிமுக இடையே இழுபறி?

0 1613
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகுதி பங்கீட்டில் பா.ஜ.க. - அதிமுக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகுதி பங்கீட்டில் பா.ஜ.க. - அதிமுக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அதிமுக இணைந்து வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றில் 10 தொகுதிகள் பா.ஜ.க.வுக்கும், 4 தொகுதிகள் அதிமுகவுக்கும் என பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில், குறைவான தொகுதிகளை ஏற்க அதிமுக தயக்கம் காட்டுவதால், பா.ஜ.க. - அதிமுக இடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுக வலியுறுத்தி வருவதாகவும் கூறபடுகிறது. இந்த நிலையில், தமிழக அதிமுக நிர்வாகிகள் புதுச்சேரி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments